இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை என அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.

கோவிட் மரணங்கள்
இதேவேளை, நேற்று முன்தினம் புதிதாக 7 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கொட IDH இல் 2 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
யட்டியந்தோட்டையில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரும் மாத்தறையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் கோவிட் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan