பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள்
முல்லைத்தீவில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு இடங்களுக்குச் சென்று குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என புளியமுனை கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குளாய் கிராமம் வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக கொக்குளாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள புளியமுணை கிராமத்தில் சுமார் 80 குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் உள்ள பொதுக் கிணறுகளில் நீர்வற்றிப் போயுள்ள நிலையில் குடிமனைக் கிணறுகளில் உள்ள குடிநீரும் உவர் நீராக மாற்றமடைந்துள்ளது.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு இடங்களுக்குச் சென்று குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்தப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதுடன் அவர்களின்
வாழ்வாதாரப் பயிர் செய்கைகளும் அழிவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri