லண்டனில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள வீட்டு வாடகை - உலக செய்திகளின் தொகுப்பு
லண்டனில் இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் நெடுக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
காரணம் வீட்டு வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.
கடந்த 3 ஆண்டுகளில் கோவிட் அச்சுறுத்தலால் பலரும் சொந்த ஊர் திரும்பியதால், பல வீடுகள் காலியாகியுள்ளன.
தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,