கொழும்பில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிதாக 'மக்கள் குரல்' என்ற தொனிப் பொருளில் இன்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியுள்ளன.
இந்த 'மக்கள் குரல்' அமைப்பில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக் கட்சி, சுதந்திரக் கட்சி, பிவித்துறு ஹெல உருமய மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் ஒன்றிணைந்திருந்தனர்.
எதிர்ப்பு போராட்டம்
அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் ஜனநாயகத்திற்கு விரோதமான ஆட்சிக்கு எதிராக நவம்பர் 21ஆம் திகதி மாபெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் இருந்து எங்கள் கூட்டணி நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஒவ்வொறு கிழமையும் நாங்கள் ஒன்று கூடி எதிர்கால அரசியல் தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தினோம்.

மேலும், எதிர்காலத்தில், நிகழ்காலத்தில் எடுக்கப்பட்ட வேண்டிய தீர்மானங்களை எடுத்தோம். கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கிய 1359 வாக்குறுதிகளில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை. அதில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லாத முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் இல்லாதொழிக்கப்பட்டதாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam