நாட்டில் ரணிலுக்கான மக்கள் ஆதரவு பெருகி வரும் நிலை நெருங்கி வருகின்றது
நாட்டு மக்களின் பஞ்ச நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றபோது ஜனாதிபதி ரணில் இழந்த ஆதரவைப் பெற அதிக வாய்ப்புள்ளது.
ஜனாதிபதி ரணில் தனது ஆதரவைக் கொஞ்சமாவது கட்டி எழுப்பாமல் ஒரு தேர்தலுக்கும் போக மாட்டார் என்ற நிலை நெருங்கி வருகின்றது.
உலக பரப்பில் டொலர் மார்க்கட் நன்றாகச் சரிந்துள்ளது. அதன் பிரகாரம் இலங்கை நாணயம் சுமார் 40 ரூபாவால் டொலர் சரிந்துள்ளதுடன், நாட்டில் பல அன்றாடப் பொருட்களின் விலைகள் குறையவுள்ளது.
உலக வங்கி
பாண் விலை 100 ரூபாவுக்கு இறங்கவுள்ளது. மறுபுறம் எரிபொருட்களின் விலைகள் ஒரு பிச்சை ரூபாவால் குறையவுள்ளது .
ஆனால், பெட்ரோல் இந்த வாரம் சுமார் 50-100 ரூபாவால் அதிகரிக்கவிருந்த நிலையில்தான் உலக அளவில் டொலர் சரிவு இங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
அமெரிக்காவின் பரிந்துரையின் பிரகாரம் உலக வங்கி (World Bank) பெருமளவு பணத்தை இலங்கைக்கு வழங்கவுள்ளது. உலக அளவில் டொலர் சரிவு தங்கத்தின் விலையும் சரிந்துள்ளதுடன், 2 லட்சமாக இருந்த தங்கம் இப்போது இங்கு நேற்று, இன்று 22 கெரட் தங்கம் 30,௦௦௦ ரூபாவால் குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்புகள் இங்கு பெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. ஜனாதிபதி ரணில் வந்த வேகத்தில் 3 தடவைகள் பெருமளவு (சுமார் 60 ஆயிரம் கோடி) வெறும் பண அச்சடிப்பு செய்திருந்தார்.
மத்திய வங்கிக்கு உத்தரவு
அதன் பிரகாரம் பண வீக்கம் ஜூரம் போன்று நாட்டில் அதிகரித்தது. அதன்பின்னர், இன்று வரை பணம் அச்சடிக்கவில்லை. அதனால் பண வீக்கம் அதிகரிக்காமல் அப்படியே இன்னும் உள்ளது.
இதை இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தா சொல்லியுள்ளார்.
உண்மையும் அதுதான். ஒரு வங்குரோத்து நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்காமல் அப்படியே இருப்பதுவே இறைவன் தந்த கொடை என்பேன்.
ஜனாதிபதி ரணில் பணம் அச்சடிக்க வேண்டாம் என்று மத்திய வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்காக இது ஜனாதிபதி ரணில் தந்த பரிகாரம் அல்ல. பணம் அச்சடிக்காமல் பாதுகாத்து வருகின்றார். பாராட்டலாம்.
விரைவில் 1,500 கோடி ரூபா பணம் இலங்கைக்கு உலக வங்கி வழங்கவுள்ளது. அந்தப் பணம் இங்கு டொலராக வரவுள்ளது.
JVP க்கு பின்னடைவு
இந்த நிலையில், பருப்பும் பாணும் விலை குறைந்தால் தற்போது அதிகரித்துள்ள JVP ஆதரவு சரியாய் வாய்ப்புள்ளது.
உலக அளவில் டொலர் சரிவு இங்கு விலை குறையும் போது, இந்த விலை குறைப்பு ஜனாதிபதி ஆட்சியின் மூலமாக வந்தது.
ரணில் ஆட்சி நல்லம் என்றும் இந்த ஆட்சிதான் வேண்டும் என்று கிராமப்புற சிங்கள மக்களும் பாண்- பருப்பு வாகனங்களும் ஒரு தப்பான முடிவுக்கு வரலாம் இல்லையா? இப்படியொரு நிலைமை அமைந்தால் நிச்சயமாக JVP க்கு மிகப்பெரிய பின்னடைவுதான். இந்த பின்னடைவு நிலையை இலக்கு வைத்தே ஜனாதிபதி ரணில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
பயணம் தொடரும். நான்/நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் போது நாடு வங்குரோத்தில் இருந்தது. சரிந்து போன நாட்டை இப்போது நான்/நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு எழுப்பி வருகின்றேன் /வருகின்றோம் என்று அதிபர் உட்பட ஜனாதிபதி ரணில் தரப்பு மக்கள் மத்தியில் அடித்து விட்டால் நிலைமை மாறாதா?
பொருட்களின் விலை
இந்த நோக்கத்தை இலக்கு வைத்தே அண்மைக் காலமாக ஜனாதிபதி ரணில் நாட்டை கட்டி எழுப்பாமல் விடமாட்டேன் ஓயமாட்டேன் என்று பேசிவருகின்றார். நாட்டு மக்களின் பஞ்ச நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றபோது ஜனாதிபதி ரணில் இழந்த ஆதரவைப் பெற அதிக வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ரணில் தனது ஆதரவைக் கொஞ்சமாவது கட்டி எழுப்பாமல் ஒரு தேர்தலுக்கும் போக மாட்டார். அந்த நிலை நெருங்கி போலத்தான் நாட்டு நிலைமை மாறி வருகின்றது.
நாட்டுக்குள் டொலர் வரும் வாய்ப்புக்கள் நெருங்கி வருகின்றது. அதனால் அன்றாடப் பொருட்களின் விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் வாய்ப்புக்கள். அடுத்த வருடம் தேர்தல் என்று யாரும் கனவு காண வேண்டாம்.
ஜனாதிபதி ரணிலின் கடைசி அரசியல் பயணம் ஏதாவது இந்த மக்களுக்கு நல்லவற்றைச் செய்து விட்டுத்தான் போவார் போல் தான் நிலைமை இருக்கிறதே... தேர்தலை யார் கேட்டார்கள்... நாட்டு மக்கள் ஒரு போதும் மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை.சிறிது காலம் ரணிலுக்கு ஆட்சி செய்யும் காலம் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான் என்ன?
ஆட்சியின் காலம் முடியும் போது தேர்தல் பற்றிப் பேசலாம் சிந்திக்கலாம். மக்களுக்குப் பஞ்சம் நீங்கவேண்டும். தற்போதைய நிலையில் அரைவாசியாவது மக்களின் பஞ்ச நிலை நீங்கினால் அதுவே பெரிய நன்மைதான். ஆனால் ரணில் ஆட்சியை இன்னும் ஒரு வருடத்திற்கு விட்டுக் கொடுத்தால் ரணிலின் ஆட்சியை அசைக்க முடியாத நிலை உருவாகும்.
சந்திரிகாவின் ஆட்சி
இந்த கருத்தை நன்கு புரிந்து கொண்டுதான் எதிர்கட்சிகள் தற்போது ரணிலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால், நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலையில் ரணிலை விட்டால் வேறு யார் ஆட்சியிலிருந்தாலும் நாட்டை எழுப்ப முடியாது. அமெரிக்காவின் தளம் ஒன்று இங்கு அமையவுள்ளதால் ரணிலின் பக்கமாக அமெரிக்கா முழுமையாக நிற்கின்றது.அமெரிக்க நேசநாடுகளின் கடன் ஆதரவு நாட்டுக்குள் வரும் நிலை.
சந்திரிகாவின் ஆட்சியின் பின்னர் மகிந்த ஆட்சி தொட்டு கோட்டபாய ஆட்சி வரை நாடு மிகப்பெரிய வங்குரோத்து நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அதற்கான முழுக் காரணம் துறை சார்ந்த அல்லது நிதி சார்ந்த அல்லது நிதி குறித்தான அறிவு சார்ந்த நிதி அமைச்சர் இல்லை எனலாம்.
எந்தவொரு துறை சாராத நிதி அமைச்சராக பெசில் நியமனம் பெற்ற பின்னர்தான் நாடு முழுசாக வங்குரோத்து நிலைமைக்குள் வந்தது! ரணில் புதிய அமைச்சரவை ஒன்றை அமைக்கவுள்ளார்.
அதன் பின்னர் கொஞ்சம் ஆட்சி ஓட்டலாம். ரணிலால் உனடடியாக நாட்டை சீராக்க முடியாது கொஞ்சம் விட்டுக் கொடுத்தப் பார்க்கணும். அதுவரை நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், தொழில் சங்க முன்னெடுப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
