வெடித்தது மக்கள் புரட்சி: பதுங்கிய ராஜபக்ச குடும்பம் (Video)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிசாந்த ஆகியோர் தலைமையிலான அவரது நெருங்கிய விசுவாசிகள் நேற்றைய தினத்தில் ஏற்படுத்திய சம்பவத்தினுடைய ஒரு விளைவு தான் இன்றையதினம் வரை இலங்கையில் கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடைய ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் இறுதி முயற்சியாக அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைதான் நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணமாகும்.
கொழும்பில் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்கிய போது நாடளாவிய ரீதியில் வன்முறைகள் அதிகரித்தன.
குழப்பத்தை உருவாக்கிய பின்னரே பிரதமர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கொடுத்திருந்தார்.
அதன் பின்னரான இலங்கையின் களநிலவரம் தொடர்பிலான செய்திகளை எமது செய்தி சேவையின் காணொளி வாயிலாகப் பார்க்கலாம்.
