இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் : ஆனைவிழுந்தான் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
கிளிநொச்சி - அக்கறையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ள 55ஆவது இராணுவ முகாமின் முன்னால் இன்று( 01.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தின் பங்களிப்பு அவசியம்
தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப்பெறுவதாகவும் தமது பகுதிகளில் நடைபெறும் மரண நிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும் அத்துடன் தமது பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அக்கறையான் பெலிஸாருக்கு பலமுறை தெரிவித்தாலும் அவர்கள் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி இப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.






ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam