மருதங்கேணியில் அதிகாரத்திலுள்ளவர்களுடன் மக்கள் நேரடி சந்திப்பு
தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாட்டில் "மக்கள் சந்திப்பு" நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று(31.07.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
இதன்போது, அப்பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் பொதுமக்கள் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
“வளமான நாடு - அழகான வாழ்க்கை” எனும் நோக்கோடும், மக்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச மக்களுக்குத் தங்கள் கருத்துக்களை அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான சிறந்ததொரு தளமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
