வட்டமடு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை(Video)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு பிரதான வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிலியடி வட்டமடு பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாது பள்ளமும் படுகுழியுமாக சேரும் சகதியும் நிறைந்ததாக காணப்படுவதாகவும் அவ்வீதியால் போக்குவரத்துச் செய்வோர் தெரிவித்துள்ளனர்.
வட்டமடு வீதியானது சுமார் மூன்று கிலோ மீட்டர் வரை சேதமடைந்து காணப்படுவதாகவும்,இவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் தினமும் பயணம் செய்வோர் சிரமங்களுக்கு மத்தியிலே தமது பயணத்தினை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மழை காலங்களில் போக்குவரத்துக்கள் மேற்கொள்ள முடியாது சிரமம்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வீதியால் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துச் செய்வதில் கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே கிண்ணியா வட்டமடு பிரதேசத்தின் வீதியினை விரைவில் புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
