மேல் மாகாண மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் தற்போது உணவுகளை வீணாக்குவதை பாரியளவில் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேல்மாகாணத்தில், உணவுக் கழிவுகள் சுமார் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நளீன் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
உணவை வீணாக்குவதை குறைத்துள்ள மக்கள்
கடந்த காலங்களில் மேல் மாகாணத்தில் இருந்து தினமும் சுமார் 300 மெற்றிக் தொன் சமைத்த உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டதாகவும், சமைத்த உணவு கழிவுகளில் அளவு சுமார் 180 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் உணவை வீணாக்குவதைக் குறைப்பதால் சமைத்த உணவு கழிவுகளின் அளவும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து சேகரிக்கப்படும் சமைத்த உணவுக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுவதாகவும், மேல்மாகாண திண்மக் கழிவு முகாமைத்துவப் பிரிவில் நாளொன்றுக்கு சுமார் 300 மெற்றிக் தொன் உரம் தயாரிக்கும் வசதிகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
