நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் (PHOTOS)
இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து எரிபொருள் விநியோகிக்கும்
நிலையத்தில் மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்று செல்லும் அவலம் தொடர்ந்தும்
காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில், மட்டகளப்பு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மட்டக்களப்பு,
மட்டக்களப்பபு மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வாகனங்களுடன் மற்றும் கலன்களுடன் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் இன்று (5) அதிகாலை 6 மணி தொடக்கம் காத்திருக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டையடுத்து மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்கள் இல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் வாகனங்கள் உட்செல்லவிடாது கயிறுகட்டி மூடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசையில் வாகனங்களுக்கு பெற்றோல், டீசல் பெறுவதற்கும் வீடுகளில் விளக்கு மற்றும் அடுப்பு எரிப்பதற்காக பொதுமக்கள் மண்ணெண்ணையை பெறுவதற்காக கலன்களுடன் வெயிலில் காத்துக்கிடக்கின்றனர்.
மட்டக்களப்பு - செங்கலடி,
மட்டக்களப்பு - செங்கலடி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்னால் திங்கட்கிழமை இரவு(04) மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருளைப் பதுக்கி வைக்க வேண்டாம். எரிபொருள் வழங்குமாறு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதனால் மட்டக்களப்பு கொழும்பு பிரதான பாதையில் போக்குவரத்து பல மணிநேரம்
தடைப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம்
நாடு முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தரித்து நிற்பதுவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முரண்பாடுகள் ஏற்படுவதும் வழமைகியுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் எரிபொருளை நிரப்புவதற்காக, யாழ். நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே உள்ள வீதி நீளத்திற்கு வாகனங்கள் தரித்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
இதன்போது அங்கு பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri