முச்சக்கர வண்டிகளால் முடக்கப்பட்ட நகரம் ஒன்றின் பிரதான வீதி
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பல நாட்களாக எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் தற்போது ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மட்டுமே வழங்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்திருக்கும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
முச்சக்கரவண்டிகளால் முடக்கப்பட்ட நகரின் பிரதான வீதி

இந்த நிலையில், கதுருவெல நகரின் பிரதான வீதி நேற்றைய தினம் முச்சக்கர வண்டிகளால் மூடப்பட்டிருந்தது.
வீதி முழுவதும் மிக அதிகமான முச்சக்கரவண்டிகள் எரிபொருளுக்காக காத்திருந்துள்ள நிலையில், குறித்த வீதி முழுவதும் முச்சக்கரவண்டிகளால் முடக்கப்பட்டது போன்று காட்சியளித்துள்ளது.
வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள்

நகர்புறங்களில் வாழும் பலரின் பிரதான வாழ்வாதாரத் தொழிலாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழில் காணப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியின் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். கிட்டத்தட்ட தமது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிலுக்கு விழுந்த மற்றுமொரு அடியாக இது காணப்படுகின்றது.
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam