முல்லைத்தீவில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் (Photos)
முல்லைத்தீவு - உண்ணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உண்ணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையம் ஒன்று இம்மாதம் 15 ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலாளருக்கு அதனை அகற்றி தருமாறு கோரி கடிதம் ஒன்றினை இம்மாதம் 16 ஆம் திகதி வழங்கியுள்ளார்கள்.
மதுபானசாலையை அகற்ற நடவடிக்கை
கடிதம் வழங்கப்பட்டு இதுவரையில் குறித்த மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறித்த கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மதுபானசாலை அமையப்பெறும் இடத்திற்கு 100 மீற்றர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலைகளோ, தேவாலயங்கள், ஆலயங்கள் இருக்க கூடாது என்பது விதிமுறையாக இருக்கின்ற போதும் குறித்த இடத்திலிருக்கும் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை.
இதனால் குறித்த கிராமத்தில் பாடசாலை அருகிலிருப்பதனால் பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலையும், பாடசாலை இடைவிலகும் நிலையும் உருவாகும் என குறித்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
