காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி மக்கள் ஆர்ப்பாட்டம்(Video)
காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து தம்மை பாதுகாக்கக் கோரி கிளிநொச்சி - கண்டாவளை பகுதியிலுள்ள மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டமானது இன்று (17.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன.
மேலும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதுடன், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளால் ஏற்படுத்தப்படும் சேதம்
அத்துடன் தனிமையில்
வசித்து வரும் பலரும், இரவு வேளைகளில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் நித்திரையின்றியும், நிம்மதியின்றியும் அவதியுறுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், உரிய அதிகாரிகள் இதனை கருத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




