வீதியினை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் வீதிமறியல் போராட்டம் (Photos)
கிளிநொச்சி - பூநகரி, வேரவில் வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி பொதுமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - மன்னார் ஏ32 வீதியினை பல்லவராயன்கட்டு பகுதியில் மறித்து நேற்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராம மக்களுக்கு முக்கிய வீதியாகக் காணப்படுகின்ற 22 கிலோமீற்றர் நீளமான பல்லவராயன்கட்டு தொடக்கம் கிராஞ்சி, வேரவில் வரை செல்கின்ற வீதியானது மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
இவ்வீதியை புனரமைக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டும் இதுவரை இழுபறி நிலையில் காணப்படுகிறது. எனவே மக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு குறித்த வீதியினை புனரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதன்போது அங்கு வருகை தந்திருந்த மாவட்டச் செயலக மற்றும் பூநகரி பிரதேச
செயலக அதிகாரிகள் பொதுமக்களுடன் கலந்துரையாடியதனை தொடர்ந்து மகஜரும்
கையளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.










இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
