செட்டிகுளத்தில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் சரியான தெரிவுகள் இடம்பெறவில்லை என தெரிவித்து செட்டிகுளம் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திரக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் யூட் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, குறிப்பாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பிழையான தெரிவுகள் இடம்பெற்றுள்ளது.
மக்கள் குடியிருக்காத, காடுகள் வயல்களுக்கு செல்கின்ற வீதிகளை திருத்தப்பணிகளுக்காக தெரிவு செய்திருக்கின்றார்கள். அது மட்டுமன்றி ஒரு சில குடும்பங்கள் இருக்கின்ற வீதிகளையும் தெரிவு செய்திருக்கின்றார்கள். அந்த வீதிகளை மாற்றி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதிகளை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் தவிசாளரால் வழங்கப்படவில்லை.
எனவே, அவ் வீதிகளுக்கு பதிலாக மக்களால் கோரிக்கை விடுக்கப்படும் வீதியினை
புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம் என்று இதன் போது கருத்து தெரிவித்தார்.



