சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி நடந்து கொண்ட விதம் தொடர்பில் மக்கள் விசனம்
அத்தியாவசிய சேவையினருக்கு முன்னுரிமை என்ற சலுகையைப் பயன்படுத்தி தனிநபர் ஒருவரது மோட்டார் சைக்கிளுக்கு பொலிஸ் அதிகாரியொருவர் எரிபொருளை நிரப்பி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை - சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி எரிபொருளினை நிரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் செயற்பாடுகள்
எரிபொருளை பெற்றவுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளரிடம் மோட்டார் சைக்கிளை வழங்கிவிட்டு பணத்தினை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விசனம்
இவ்வாறு தொடர்ந்து நடைபெறுவதை அவதானித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்ற பொதுமகன் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரியை பின்தொடர்ந்து வந்து, பொலிஸ் நிலையத்தில் வைத்து பணம் கொடுப்பதையும் புகைப்படம் எடுத்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கு என முன்னுரிமை அளித்து வழங்கப்படும் சந்தர்ப்பங்களை
பொலிஸார் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்வது என்பது விசனத்தை ஏற்படுத்துகிறது என
மக்கள் தெரிவிக்கின்றனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
