எரிபொருள் விலையை உயர்த்தாவிட்டால் அதன் நட்டத்தை அனைத்து மக்களும் செலுத்த நேரிடும்!
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படாவிட்டால் அதனால் ஏற்படும் நட்டத்தை அனைத்து மக்களும் செலுத்த நேரிடும் என அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மீளவும் எரிபொருட்களுக்கான விலையை உயர்த்த நேரிட்டுள்ளது. கடந்த மே மாதம் எரிபொருட்களின் விலைகள் இறுதியாக உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் எரிபொருட்களுக்கான விலை 24 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது இந்நிலையில், எரிபொருட்களின் விலைகளை உயர்த்தாவிட்டால் அதனால் ஏற்படும் நட்டத்தை வாகனம் இல்லாதவர்களும் அதாவது ஒட்டுமொத்த நாட்டு மக்களும் செலுத்த நேரிடும்.
இவ்வாறு செய்வது அனைத்து மக்களுக்கும் செய்யும் அநீதியாகும், உலக சந்தையில் எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் திறைசேரி நிவாரணங்களை வழங்காவிட்டால் விலை அதிகரிப்பினை தவிர்க்க முடியாது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
