முல்லைத்தீவில் காட்டு யானைகளின் தொல்லையால் அவஸ்தையுறும் மக்கள்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலக் குடியிருப்பு, மல்லிகை தீவு ஆகிய பகுதிகளில் தொடரும் காட்டு யானைகளால் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதுடன் மக்கள் உயிர் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேபாப்பிலவு பிலக் குடியிருப்பு, மெள்ளியவளை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மல்லிகை தீவு ஆகிய பகுதிகளிலும் குறிப்பாக வேணாவில் கோவில் ஆகிய பகுதிகளிலும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.
அச்சுறுத்தல்
இவ்வாறு காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் தமது வாழ்வாதார பயிர்களையும் இழந்து வருகின்றனர்.

குறிப்பாக பயன்தரு தென்னை மரங்கள் ஏனைய பயன் தரு மரங்களும் இவ்வாறு காட்டு யானைகளால் அழிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பிரதேசங்களுக்கான யானை வேலிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கின்ற போதும் அப்பகுதிகளுக்கு யானை வேலி அமைத்து தரப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு பின்னர் கேப்பாபிலவு வீதியூடாக பயணிப்பதும் பெரும் அச்சுறுத்தலான விடயமாக மாறி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri