மட்டக்களப்பில் அடிப்படை வசதிகளின்றி வாழும் கிராமத்து மக்களின் அவலநிலை
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம்,கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழும் பாலைமீன்மடு கிராத்தைச் சேர்ந்த மக்களின் அவல நிலை குறித்து அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு, பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை காணொளி எடுத்து முகநூலில் பதிவிட்டு அச்சுறுத்துவதாக பெண்கள் கூறியுள்ளனர்.
குறித்த கிராமம் மட்டு.நகரில் இருந்து பார்வீதி ஊடாக முகத்துவாரம் வெளிச்ச வீட்டுக்கு அண்மித்த பகுதியில் சுமார் 5 கிலோமீற்றர் தூரத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாலைமீன்மடு கடற்றொழில் கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்து வந்தது.
அடிப்படை வசதிகள்
இந்தநிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்ததால் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொண்டது.
இந்த நிலையில் இவர்களுக்காக சுவிஸ் கிராமத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டபோதும் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணம் ஆகிய காரணத்தால் பெற்றோர்கள் அங்கிருக்க முடியாமல் வெளியேறவேண்டிய துர்பாக்கிய நிலமை ஏற்பட்டது.
அத்துடன் சில குடும்பங்களின் பிள்ளைகள் திருமணமாகி பெற்றோருடன் இருக்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலில் தாங்கள் இருந்த கடற்றொழில் கிராமத்தில் சென்று குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருந்தபோது அங்கு ஓலைக்குடிசைகளை அமைத்து குடியேறியவர்களை வெளியேறுமாறும் அரச காணி என பிரதேச செயலகம் அறிவித்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தனர்.இதன்போதும் அவர்கள் எங்கும் செல்லமுடியாதால் தொடர்ந்து அங்கு குடிநீர் கிணறு மற்றும் மலசல கூடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
அவல நிலை
இவ்வாறு பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் வாழந்துவரும் அந்த மக்களுக்கு கடந்த 15 வருடத்துக்கு மேலாக காணிக்கான பத்திரம் வழங்கப்படால் உள்ளது.
அதே நேரத்தில் அந்த கிராமத்துக்கு அருகிலுள்ள அரசகாணிகளை 5 ஏக்கர் தொடக்கம் 50 ஏக்கர்வரை அந்த பகுதியை சேராத செல்வந்தர்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பலர் அத்து மீறி ஏக்கர்கணக்கில் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக பிரதேச செயலகம் சட்ட நடவடிக்கை எடுக்காது வீடு இன்றிய ஏழைமக்கள் தமது பூர்வீக காணியில் குடியேறியதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்துவரும் அந்த மக்கள் நிம்மதியாக மலம்கழிக்க கூட செல்லமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது
இந்த நவீன நூற்றாண்டில் ஒரு மாநகர எல்லைக்குள் இன்றுவரை மலசல கூடம், குடிநீர் மின்சாரம் இன்றி வாழந்துவரும் மக்களின் அவல நிலையை யார் தீர்க்கப் போகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இவ்வளவு சீக்கிரம் முடியுமென கனவிலும் நினைக்கவில்லை: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளின் பதிவு News Lankasri

முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்! ஆன்டிலியாவில் எப்படி வேலைக்கு சேர்வது? News Lankasri

95 நாடுகள் ஆதரவு, 18 நாடுகள் எதிர்ப்பு: உக்ரைன் போர் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் News Lankasri
