மன்னார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கரிசணை(Video)
மன்னார் மாவட்டத்தில் மக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இடம் பெற்று வருகின்ற கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(02) மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மக்களின் பிரச்சினைகள் குறித்து மன்னார் பிரஜைகள் குழு தொடர்ச்சியாக மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது.
பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்தல்

இந்நிலையில் கனிய மன் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் தொடர்பில் அறிந்துக்கொண்டு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விஜயம் மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்களுக்காக பிரஜைகள் குழுவினர் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக தாம் மன்னாருக்கு வருகை தந்ததாக கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு

மன்னார் மண்ணுக்கான போராட்டத்தில் மக்களுடன் மக்கள் விடுதலை முன்னணி என்றும் துணை நிற்கும்.
எனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக
முன் நிற்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்
இ.சந்திரசேகரம் பிரஜைகள் குழுவினருடனான சந்திப்பின் போது தெரிவித்தமை
குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri