கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது 164 பேர் பலி (VIDEO)
கஸக்ஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற வன்முறைகளில் குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளில் அரச படையினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சுமார் 6000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கஸக்ஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
