நைஜீரியாவில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் பலி
நைஜீரியாவில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 113 பேர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள மன்ஷு கிராமத்தில் வசிக்கும் இரு தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இந்த கருத்து வேறுபாடானது மோதலாக மாறியதை தொடர்ந்து இரு தரப்பினரும் கையில் கிடைத்த பொருள்களை ஆயுதங்களாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
இராணுவத்தினரின் அனுமதி
குறித்த மோதலினால் இருதரப்புகளையும் சேர்த்து 113 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், 300ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன் நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் அனுமதியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
களை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
