திடீரென படையெடுக்கும் யானைகள் : அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல நூற்றுக்கணக்கான யானைகள் படையெடுத்து வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், பண்ணையாளர்கள், சேனைப் பயிர் செய்வோர் என பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் மிகுந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு விவசாய அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட வேப்ப வெட்டுவான் மக்கள் லங்காசிறிக்கு ஊடகத்திற்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாகவும், தங்களது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வர முடியாத நிலை நிலவுவதால் யானைகளிடம் இருந்து தங்களது கிராமத்தை பாதுகாக்க யானை வேலிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,