நாளாந்தம் அதிகரிக்கும் வாழ்க்கை செலவினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்கள்
இலங்கையில் தற்போது எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு நிலையை அடுத்து தொடர்ச்சியாக பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது.
ரஷ்யா – உக்ரேன் நாடுகளுக்கிடையிலான போர் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக அதிகரித்தமை காரணமாக வேறுவழியின்றி உள்நாட்டிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமான பயணச் சீட்டு விலை, தங்கம் விலை, உணவு பொருட்கள், கோதுமை மா, மருந்து, முச்சக்கர வண்டி கட்டணம் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்துள்ளமை மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இதுபோன்ற இக்கட்டான நிலையினை எதிர்கொள்ளும் பெரும்பாலும் வேலையின்றியும்,நிரந்தர வருவாய் இல்லாத மக்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் 'போ'க்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள்,செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள்,கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தொடர்ச்சியாக விதிக்கப்படும் தடை மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.
மறுபுறம் மின் கட்டணம், முச்சக்கர வண்டி கட்டணம், பெற்றோல் விலை அதிகரிப்பு என்பன தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றமையினால் மக்கள் சமாளிக்க முடியாத அளவு கடும் பொருளாதார நெருக்கடியை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
