நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன் திரண்ட மக்கள்! குவிக்கப்பட்ட பொலிஸார் (Photos)
நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக குழப்பமான சூழ்நிலை பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் (19.07.2023) குறித்த பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டுள்ளனர்.
எந்தவொரு வங்கியிலும் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான கடிதம் நோர்வூட் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை பெறுவதற்காக பெருமளவான மக்கள் வந்துள்ளனர்.
குழப்பம்
இந்த நிலையில் வரிசையில் நின்றவர்களில் பெருமளவானோர் மயக்கமுற்று விழுந்ததையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் சிலர் பிரதேச செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் இவ்வாறான குழப்பம் பதிவாகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும் அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



