கோட்டாபயவின் ஆட்சி நீடித்தால் மக்கள் செத்துவிடுவார்கள்! - பொதுமக்கள் ஆதங்கம் (Video)
மக்களுக்கான தலைவர் ஒருவரே தற்போது தேவையென பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமே இந்த நாடு வளரச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் மக்கள் கருத்துக்களை எமது செய்தி சேவை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்றது.
அந்த வகையில் நாட்டின் தற்போதைய நிலை குறித்து பொது மகன் ஒருவர் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையில்லை. அவர் அவர்கள் நினைத்தவாறு விலையை தீர்மானிக்கின்றனர். இப்படியே போனால் களவு, கொள்ளை எல்லாம் கூடிப்போகும். எரிவாயு கொள்கலன்களை வாங்குவதற்காக ஒரு நாள் முழுமையாக வேலைக்கு செல்ல முடியாத நிலை.
பால்மாவை வாங்குவதற்காக 4 யோகட் பக்கெட்களை வாங்க வேண்டும். பால்மாவை வாங்குவதற்கே இங்கு வழியில்லை. மூன்று வருடத்திற்கு இந்த அரசாங்கம் நீடித்தால் மக்கள் செத்து விடுவார்கள்.
இந்த அரசாங்கம் இருப்பதற்கு பதிலாக வீடு செல்வதே மேல். பணக்காரர்கள் மட்டும்தான் நாட்டில் வாழ முடியும். ஏழை மக்களின் நிலை, இந்த நாட்டில் மக்கள் வாழ முடியாது.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan