எரிபொருள் வரிசையினால் தொடரும் நெருக்கடி நிலை (PHOTOS)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் நிலையங்களில் எந்நேரமும் அதிகளவில் மக்கள் குவிவதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன.
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அவ்வாறான நிலையிலேயே இருந்து வருவதன் காரணமாக எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக குவியும் வாகனங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்களைப்பெற்றுக்கொள்வதற்காக இரவு வேளைகளிலும் அதிகாலை வேளைகளிலும் பெருமளவான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை காண முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஒரு சில எரிபொருள் நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகங்கள் நடைபெறுவதனால் மக்கள் குவியும் நிலை காணப்படுகின்றது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் விலையேற்றம் ஏற்படும் என்று மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரசாரங்கள் காரணமாக இவ்வாறு எரிபொருள் நிலையங்கள் தொடர்ச்சியாக மக்களால் நிரம்பிவழிவதாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
