எரிபொருளுக்காக வீதிக்கிறங்கி போராடும் மக்கள் (Photos)
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுபாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மக்கள் பல மணிநேரங்கள் மட்டுமன்றி நாற்கணக்கிலும் காத்திருந்து எரிபொருளை பெற்றுகொள்கின்றனர்.
இந்நிலையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்நிலையில், மக்கள் ஆத்திரமடைந்து போராட்டங்களில் ஈடுபடுவதையும் காணலாம்.
வவுனியா
வவுனியா நகர மத்தியில் எரிபொருள் கோரி மக்கள் முரண்பட்டமையால் பதற்றம் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை வழங்குமாறு கோரி மக்கள் முரண்பட்டமையினால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு ஒன்று கூடிய மக்களினை அப்பகுதியில் இருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டிருந்தனர்.
இதன் காரணமாக மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஷான்
கிளிநொச்சி
கிளிநொச்சியில் எரிபொருள் வழங்காத நிலையில் இன்று(16) மாலை ஏ-09வீதியை மறித்து மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளாக காத்திருந்த மக்கள் எரிபொருள் வழங்கப்படாத நிலையில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
செய்தி: யது



