மின்சாரத் தடை குறித்து சமூக ஊடகங்களில் அதிருப்தி வெளியிட்ட மக்கள்
மின்சாரத் தடை குறித்து சமூக ஊடகங்களில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் தடைப்பட்டமையைத் தொடர்ந்து இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினம், இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்பய்படாத காரணத்தினால் இவ்வாறு மின்சாரதம் தடைப்பட்டதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பின்னணியில் மின்சாரம் தடைப்பட்டதனால் மக்கள் சமூக ஊடகங்களின் மூலம் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 11 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
