முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிக்கடவை, வீதிசமிக்ஞை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவை, வீதி சமிக்ஞை இல்லாததனால் வீதியினை கடந்து செல்வதற்கு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக அதிகமான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதனால் நீதிமன்றத்திற்கு தேவையின் நிமிர்த்தம் வரும் பொதுமக்கள் போக்குவரத்து கடவை இல்லாததனால் வீதியினை கடப்பதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளாகியுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு முன்பாக வீதி சமிக்ஞை இல்லாததனாலும் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் நீதிமன்றம் இருப்பதனை கவனிக்காமல் ஒலி எழுப்பி நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
குறித்த பகுதியில் பாதசாரிகள் கடவை, வீதி சமிக்ஞை இல்லாததனால் விபத்துக்கள் ஏற்பட கூடிய அதிக வாய்ப்புக்கள் இருப்பதனால் நீதிமன்றத்திற்கு முன்பாக வீதி சமிக்ஞை, பாதசாரிக்கடவையை உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து அதனை அமைத்து தருமாறும் நீதிமன்றிற்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
