பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் உள்ள வீதி : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு பொற்பதி மணல்காடு இணைப்பு வீதியை புனரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்காடு கிராமத்திற்கும் பொற்பதி கிராமத்திற்கும் இடையே யான சுமார் 500 மீற்றர் விதி பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமையால் பொற்பதி மற்றும் மணல் காடு கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
பொற்பதி மற்றும் மணல்காடு கிராமங்கள் மீன்பிடி தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் 500மீற்றர் வீதி சீரின்மை காரணமாக சுமார் 8 km தூரம் சுற்றி சென்று வருகின்றனர்.
மேலும் பொற்பதி ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் 9 வரையே வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
மணல்காடு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் க.பொ.த. உயர் தரம் வரை வகுப்புக்கள் இடம் பெறுகின்றன.
பொற்பதி பாடசாலையில் கற்கின்ற மாணவர்கள் 10, 11, மற்றும் உயர் தரங்களில் கற்க வேண்டிய மாணவர்கள் பருத்தித்துறைக்கு சுமார் 12 km தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறாக குறித்த பொற்பதி மணல்காடு மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் உரியவர்கள் கவனமெடுத்து வீதியை சீர் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam