நானாட்டான் பகுதியில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை
மன்னார் - நானாட்டன் பிரதேச சபை பிரிவில் உள்ள பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் ,வீதிகளில் மாடுகள் குடியிருப்பதாகவும் இதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நானாட்டான் பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் நானாட்டான் சுற்று வட்ட பகுதி மற்றும் பிரதான வீதிகளின் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதால் அதிகளவு விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், ஆனாலும் குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே விரைவில் வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கவனிப்பின்றி நடமாடும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நானாட்டன் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan