ஜனாதிபதிக்கு குவியும் மக்களின் வாழ்த்து!
தலதா மாளிகைக்கு ஆசி பெற சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, அங்கு வருகை தந்திருந்த மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று(15) கையளித்த ரணில் விக்ரமசிங்க, வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுள்ளார்.
இதன்போது தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் நலன் விசாரித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளார்.
தேரரின் ஆசி
இதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. ஸ்ரீ சுமங்கல தேரரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னர் தேரருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரின் ஆசி பெற்றதுடன் அஸ்கிரி பீடத்தின் மகா சங்கத்தினர், ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியுள்ளனர்.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, அனுராத ஜயரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அலுத்கமகே, குணதிலக்க ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
