கனடாவில் வேலை வாய்ப்பு! மக்களை ஏமாற்றிய நபர் சிக்கினார்
கனடாவில் வேலை மற்றும் வதிவிட விசா தருவதாக கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மக்களை ஏமாற்றி 5 இலட்சம் முதல் 20 இலட்சம் வரை பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகநபரை இன்று (02.03.2023) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
கனேடிய தொழில் வாய்ப்பு

சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய 25 பேரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கனேடிய தொழில் ஆட்கடத்தலுக்கு உதவிய எம்பிலிப்பிட்டிய உள்ளுராட்சி சபையில் பணிபுரியும் அரச அதிகாரி ஒருவரையும் பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சந்தேகநபர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு மார்ச் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan