ஜனாதிபதியான ரணில்: பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள் (Photos)
ரணில் விக்ரமசிங்க புதிய இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையை அடுத்து புத்தளத்தில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.
பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க இன்று (20) இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை கொண்டாடும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் நகர அமைப்பாளர் ஜேசுதாஸ் தலைமையில் ரணிலின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா
இன்று நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வவுனியா நகர பகுதியிலும் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

செய்தி: திலீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் மற்றும் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

