கொழும்பில் அடை மழைக்கு மத்தியில் திரண்டுள்ள மக்கள் (Video)
நாட்டில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பில் பல எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும், மண்ணெண்ணெய் பெறுவதற்காகவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.
எனினும் தற்போது கொழும்பின் பல பகுதிகளில் அடை மழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் வெள்ள நீர் என்பவற்றையும் பொருட்படுத்தாது மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ள பலர் காத்திருக்கின்றனர்.
அதில் சிலர் குடைகள் கூட இன்றிய நிலையில் கொட்டும் மழையில் நனைந்த வண்ணம் காத்திருப்பதையும் அவதானிக்கக்கூடியாக காணப்படுகிறது.