"இலங்கையில் பொருளாதார நெருக்கடி:இந்தியாவில் தஞ்சமடையும் மக்கள்" (VIDEO)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்து வருவதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு சென்ற 6 பேர் ராமேஸ்வரத்திற்கு அருகில் தஞ்சமடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் அத்தியவசிய பொருட்களை கூட கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு அருகில் மூன்றாம் தடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட ஆறு பேர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் இலங்கையின் தலைமன்னாரில் இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் இருந்து பலர் இந்தியாவுக்குள் வரலாம் என்ற தகவலை அடுத்து இந்திய கடலோர காவற்படையினர் தீவிர ரோந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையில் வந்த தியூரி என்ற பெண்,
“இலங்கையில் விலைவாசிகள் அதிகம். கணவன்மார் இருப்பவர்களே கஷ்டப்படுகின்றனர். எனக்கு கணவன் இல்லை, இரண்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படுகிறேன். வேலைகளுக்கு சென்று பிள்ளைகளை வளர்க்க நினைத்தாலும் முடியவில்லை. எனது பெற்றோர் அங்கு இல்லை” எனக் கூறியுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
