வவுனியாவில் புதையல் தேடும் முயற்சி: 9 பேர் கைது
வவுனியாவில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (05) மாலை 9 நபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதையல் தேடும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஆகியவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பலர் நிற்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாகர் இலுப்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய நபர், மூன்றுமுறிப்பு பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய நபர் உட்பட மகர பகுதியினை சேர்ந்த 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக
நபர்கள் மற்றும் ஸ்கானர் இயந்திரம், வாகனம் ஆகியவற்றினையும் வவுனியா நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam