சிறுத்தை நடமாட்டத்தினால் பீதியடையும் மலையக மக்கள்: 13 நாய்கள் பலி
மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த நேற்றுமுன்தினம்( 30/03/2026)இரவில் சிறுத்தை ஒன்று வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றினை தூரத்தி கௌவிக் கொண்டு செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிறுத்தை நடமாட்டம்
அவ்வாறான சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சீசிரிவி (CCTV)கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்களால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இதுவரை இந்த தோட்டத்தில் 13 நாய்களை பலி எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கின்றன.
ஆகவே, அந்தப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam