நாட்டில் பல்வேறு பிரச்சனைகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – சஜித்
நாட்டு மக்கள் தற்பொழுது பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கடுவெல பகுதியில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மக்களின் வருமானம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
பால்மா, அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், இந்த கடுமையான சூழ்நிலையில் அரசாங்கத்திடம் எந்தத் தீர்வுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும் போது, அரசாங்கத்தினர் பிரச்சினைகளை கிண்டலாகப் பேசுகின்றனர் எனவும், ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பேசுவதில் மட்டுமே திறமையானவர்கள் எனவும் சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால், அவர்களின் உரைகளில் யாருக்கும் பயனுள்ளதாகக் கூடிய தீர்வோ, திட்டமோ, பார்வையோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும்பாலான மக்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்க்கையை வாழ்கிறார்கள் எனவும் உலகளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல், மக்களின் வாழ்வின் மகிழ்ச்சியையும் கணக்கிடும் புதிய கருவிகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இலங்கை அரசு இந்த சர்வதேச நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியாத முறையில் செயல்படுகிறது என குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் வரி விதிப்புக்களினால் இலங்கையின் ஆடை ஏற்றமதித்துறை பெரிதும் பாதிக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த புதிய வரிக் கட்டண உயர்வினால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் கணிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தால் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. வரி அதிகரிக்கப்பட்டால் நாட்டின் ஏற்றுமதி துறைக்கு பெரும் சேதம் ஏற்படும். ஆனால், இதை சமாளிக்க எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளா.
மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நடவடிக்கைகள் மாற்றம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு போராட்டங்களை ஆதரித்திருந்தாலும், அதிகாரத்திற்கு வந்தபின்னர் போராட்டங்களை கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
