நாட்டு மக்களுக்கான வரி கோப்புகள் தொடர்பில் வெளியான தகவல்
ஒரு மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் வரிக் கோப்புகள் உள்ள போதிலும்106,022 வரிக் கோப்புகளே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023/24 ஆண்டிற்கான வரிக் கோப்புகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான கடந்த 30ஆம் திகதிக்குள் 106,022 வரிக் கோப்புகள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஒன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
120,000க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு வருவாய் துறையில் தங்கள் வரிக் கோப்புகளை திறந்துள்ளனர்.
வரிக் கோப்பு
நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 26,821 நிறுவனங்கள் மட்டுமே தங்கள் வரிக் கோப்புகளை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 3,834 கூட்டு நிறுவனங்களும் தங்கள் வரிக் கோப்புகளை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.