பென்டகன் இராணுவ இரகசியக் கசிவு! பின்னணியில் மறைந்துள்ள உளவியல் யுத்தம் (Video)
அமெரிக்காவின் படைத்துறையை மாத்திரமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராஜதந்திர செயற்பாடுகளையும் ஆட்டம்காண வைத்துள்ள ஒரு விடயம் தான் Pentagon Leaks என்ற அமெரிக்காவின் இராணுவ இரகசிய கசிவு விவகாரம்.
குறிப்பாக உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான ஏராளமான இரகசியங்களை அமெரிக்க வான் பாதுகாப்பு படைப் பிரிவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 21 வயதான வீரர் ஒருவர் சேகரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த செயல், உக்ரைன் போர்க்களத்தில் மாத்திரமல்ல, சர்வதேச இராஜதந்திர வட்டங்களிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மாத்திரம் அல்ல இஸ்ரேல், எகிப்து, பிரித்தானியா, தென்னொரியா, ஜோர்தான், உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளையும் சங்கடத்திற்கு உள்ளாக்கக்கூடிய இரகசியங்கள் அடங்கிய சுமார் 100ற்கும் அதிகமான ஆவணங்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்கா போன்ற ஒரு இராணுவ வல்லரசின் இரகசிய உளவுத் தகவல்கள் இத்தனை பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்கின்ற விடயம் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ வல்லாண்மையின் மீது எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்விக்குறி ஆகும்.
பென்டகன் இராணுவ இரகசியக் கசிவு பற்றி நாம் ஆராயப் போவதில்லை. ஆனால் இந்த ஆவணக் கசிவு விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு முக்கிய விடயத்தை தான் இன்றைய உண்மையின் தரிசனம் ஆழமாக ஆராய்கின்றது,