196 லீட்டர் கோடாவுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அபராதம்
கசிப்பு வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு, மல்லாகம் நீதிமன்றினால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரத்தினைச் சேர்ந்த இருவர் கடந்த 12.08.2021 அன்று 196 லீட்டர் கோடாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களுக்கு தலா 75ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 10.09.2021 அன்று தொல்புரம்
- வீராவத்தை பகுதியில் சந்தேகநபரொரவர் 10 லீட்டர் கோடா மற்றும் 1 லீட்டர் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு 25ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam