பேலியகொட பொலிஸ் நிலையம் சித்திரவதை அறை! மைத்திரி குணரத்ன
பேலியகொட பொலிஸ் நிலையத்தை, சித்திரைவதை அறை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
தனது மகன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “பிற பொய்யான குற்றச்சாட்டுகளில் பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது.
தனது மகன் மீதான தாக்குதல் வழக்கில் மட்டுமல்லாமல், ஒரு சட்டத்தரணியாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் மீகார குணரத்ன மீது அண்மையில் பேலியகொட பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியிருந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த மீகார குணரத்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



