பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - முக்கிய கலந்துரையாடல்
பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல், இன்று(08.05.2026) பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
இதன்போது, மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மீனை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான கூலரின் தேவை தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகள், தினசரி வியாபாரத்தின் போது எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள், சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் உள்ள சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
உடனடி தீர்வுக்கான நடவடிக்கை
வியாபாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த தவிசாளர் மற்றும் செயலாளர், அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
இதன்படி, வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சந்தை நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகரசபை தரப்பில் உறுதியளிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில், சந்தை நடவடிக்கைகளை எவ்வாறு செம்மையாகக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது குறித்த முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam