பருத்தித்துறை நகரசபையில் பெரும் நிதி முறைகேடு என குற்றச்சாட்டு
பருத்தித்துறை நகரசபையால் அமைக்கப்பட்ட புதிய மரக்கறி சந்தை தொகுதி உரிய நியமங்கள், நடைமுறைகள், தீர்மானங்கள் பின்பற்றப் படாமல் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், காணி கொள்வனவிலும் விலை மதிப்பீட்டு தினைக்களத்தின்மதிப்பீட்டிற்கு அதிகமாக பணம் கொடுக்கப்பட்டு காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் 2009 ஆம் ஆண்டு பஸ்நிலையத்திற்கு அருகில் சந்தை தொகுதி அமைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் புதிய சந்தை அமைக்கும் நோக்கில் தனியார் காணி ரூ. 23 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செலவீனம்
காணி உறுதி எழுதுவதற்கான கட்டணத்தில் 1% பதிலாக 2% வழங்கப்பட்டதால் சுமார் ரூ. 2.30 இலட்சம் வீண் செலவாகியுள்ளதாகவும், கூறுவிலை கோரல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், அரச காணி 2 ஏக்கர் அளவில் ஒதுக்கப்பட்டிருந்தும் அதனை பயன்படுத்த அனுமதி பெறப்படாமல், பின்னர் தனியார் காணி ரூ. 12.6 மில்லியனுக்கு திண்மக் கழிவு பரிகரிப்பு நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொது கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், 27 பேர்ச் அளவுடைய வலிக்கண்டி காணி அரச மதிப்பீட்டுக்கு மேலாக ரூ. 23 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டதால் சுமார் ரூ. 17 இலட்சம் வரை மேலதிக செலவீனம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நில அளவீடு மற்றும் ஆவணச் சான்றுகள் இல்லாமல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், சந்தை விலை மற்றும் நடைமுறை பெறுகை விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் கணக்காய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நகரசபை சபையில் தவிசாளர் விளக்கமளித்த நிலையில், உறுப்பினர்கள் இடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri