சாத்வீகப் போராட்டம் ஜனநாயக ஆட்சியினரால் மதிக்கப்பட வேண்டும்! சிறிநேசன் எம்.பி வலியுறுத்து
ஜனநாயக நாடுகளில் சாத்வீகப் போராட்டம் ஆட்சியாளர்களால் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு மதிக்கப்படுகின்ற போது மக்களும் ஜனநாயகத்தின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(30.09.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் அந்நிய ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்த காந்தியடிகளார் தனது போராட்ட வழியாக சாத்வீகத்தைத் தேர்த்து எடுத்தார். மக்களை அவ்வழியில் அணிதிரட்டி வெற்றியும் பெற்றார். அதன் மூலம் இந்தியா சுதந்ரமும் பெற்றது.
சாத்வீகப் போராட்டம்
ஆயுதப் போராளியான திலீபன் இந்தியாவிடம் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து தனது உயிரை நீத்தார். காந்திய தேசத்துக்கு காந்திய வழியைக் கொண்டு போராடி உயிர் விட்டார். அவர் உயிர்நீத்து 39 ஆண்டுகள் கடந்துள்ளது.
ஆனால், ஈழத்த மிழர்கள் திலீபனை ஒவ்வொரு ஆண்டும் நினைவில் ஏந்தி அஞ்சலி செலுத்துகின்றார்கள். அந்த அஞ்சலி நிகழ்வை ராஜபக்ச அதிகார தரப்பினர் பல தடவைகள் ஒடுக்கியுள்ளனர்.

ரணில், மைத்திரி, அநுர அரசாங்கங்கள் இந்த அஞ்சலிகளை குழப்ப நினைக்கவில்லை. ஆனால் இம்முறை யாழ்.நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் 39 ஆவது நினைவேந்தலுக்கான உருவச்சிலையினை பொலிசார் அகற்றியதன் மூலமாக சாத்வீகப் போராட்டத்திற்கு எதிரிடையான போக்கினை வெளிக்காட்டியுள்ளனர்.
இதனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் அதிருப்தி அடைவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.அதற்கான எதிர்ப்பு தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிவில் அமைப்புகளாலும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களாலும் வெளிக்காட்டப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam