இரணைதீவில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 24 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
இரணைதீவில் சுய தனிமைப்படுத்தப்பட்ட சுமார் 24 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவிலிருந்து தலைமன்னார் பகுதிக்குச் சட்ட விரோதமான முறையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 நபர்களும், அவர்களை அழைத்து வந்தவர்கள் என 3 நபர்களுக்கு இன்றையதினம் புதன் கிழமை (5) காலை சுய தனிமைப்படுத்தப்பட்ட இரணை தீவு பகுதியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களில் ஒருவர் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய 3 நபர்களுக்கும் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்படையினர் மற்றும் பொலிஸார் உட்படக் குறித்த 21 பேருக்கும் இவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இரணைதீவு பகுதியில் குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பரிசோதனை மாதிரிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அத்துடன், நேற்று செவ்வாய்க்கிழமை (4) மன்னார், நானாட்டான் பகுதிகளில் சுமார் 416
பி.சி.ஆர் பரிசோதனைகள் கொழும்பில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
