வவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
வடமாகாணத்தில் மீண்டும் கோவிட்-19 தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தினை கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றிருந்தது.
நகர வர்த்தகர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் முகமாக முதலாம் குருக்குத்தெரு வர்த்தக நிலையங்கள் மற்றும் நகரின் சில வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் வவுனியா வர்த்தக சங்கத்தின் உதவியுடன் நகரில் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










